வௌ்ளவத்தையில் நிலம் தாழிறக்கம்

காலி வீதி, வெள்ளவத்தை, புகையிரத நிலைய வீதி பகுதியில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக வெள்ளவத்தை பகுதியிலிருந்து செல்லும் வீதி ஒரு பாதைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் சாரதிகள் லிலீ அவென்யூ கிளை வீதியூடாக கரையோர வீதியில் பிரவேசித்து கொழும்பு நோக்கி பயணிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணிக்கும் சாரதிகள் வழமை போன்று வெள்ளவத்தை ஊடாக பயணிக்க முடியும்.
(Visited 10 times, 1 visits today)