உயிரிழந்த யாசகரின் பையில் லட்சக்கணக்கில் பணம்!
இந்தியா, கேரளாவில் விபத்தில் உயிரிழந்த யாசகர் வைத்திருந்த பையில் இருந்து லட்சக்கணக்கில் பணம் மீட்கப்பட்டுள்ளது.
கேரளா, ஆலப்புழா மாவட்டத்தின் சரும்மூடு பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்த அனில் கிஷோர் மீது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
இதனால் காயமடைந்த அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், இரவோடு இரவாக வைத்தியசாலையில் இருந்து தப்பியோடியுள்ளார்.
மறுநாள் காலை அவர் வீதியோரம் உயிரிழந்து கிடந்தார். அவரது உடைமைகளை பொலிஸார் பரிசோதித்தனர்.
அதில் ரூபாய் நோட்டுகள் இருந்தன. சரும் மூடு பகுதி பஞ்சாயத்து உறுப்பினர் முன்னிலையில் பணம் எண்ணப்பட்டது.
இந்திய நாணய மதிப்பில் நான்கரை லட்சம் ரூபா பணம் இருந்துள்ளது. சவுதி ரியால்கள் சிலவும் அவரிடம் இருந்தன. அந்தப் பணத்தை பொலிஸார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளனர்.





