இலங்கையில் மருத்துவ பீட ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை!
மருத்துவ பீட ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,
இதன்படி மொரட்டுவை, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு ஆகிய மருத்துவ பீடங்களுக்கு இறுதியாண்டு பேராசிரியர் பிரிவுகள் நிறுவப்படவில்லை மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள மருத்துவபீட மாணவர்களின் குழு அழைப்பாளர், நவின் தாரக, “அனைத்து மருத்துவ பீடங்களிலும் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது.இதற்கு இது வரை தீர்வு இல்லை.
புதிதாக நிறுவப்பட்ட மூன்று மருத்துவ பீடங்களை எடுத்துக்கொண்டால் மொரட்டுவை, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மருத்துவ பீடங்கள் இல்லை. தற்போதுதான் இறுதியாண்டு பேராசிரியர் பிரிவுகள் கட்டப்பட்டுள்ளன.
இன்னும் அந்த பேராசிரியர் பிரிவுகளை ஆரம்பிக்கும் திட்டம் இல்லை.குறைந்த பட்சம் மொரட்டுவை மருத்துவ பீடம் தொடர்பான கட்டிடம் எதுவும் நாட்டில் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.