ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலியாவில் சர்ச்சைக்குரிய மசோதாவைத் பிரிக்க தீர்மானம்

போண்டி கடற்கரைத் தாக்குதலைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட ‘வெறுப்புப் பேச்சு மற்றும் துப்பாக்கிச் சட்ட மசோதாவை’ப் பல பகுதிகளாகப் பிரிக்க பிரதமர் அந்தோணி அல்பானீஸ் முடிவு செய்துள்ளார்.

எதிர்க்கட்சியும் பசுமைக் கட்சியும் ஒருங்கிணைந்து இந்த மசோதாவை எதிர்த்த நிலையில், நாடாளுமன்றத்தில் ஆதரவு கிடைக்கும் பகுதிகளை மட்டும் தனித்தனியாக நிறைவேற்ற அரசு தீர்மானித்துள்ளது.

இதன்படி, தேசிய துப்பாக்கி திரும்பப் பெறும் திட்டத்திற்குத் தனி மசோதாவும், வெறுப்புப் பேச்சு மற்றும் விசா ரத்து தொடர்பான குடியேற்றச் சட்டங்களுக்குத் தனி மசோதாவும் தாக்கல் செய்யப்படும்.

கடுமையான விமர்சனத்திற்குள்ளான ‘இன இழிவுபடுத்துதல்’ சட்டப்பிரிவு இப்போது நீக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சட்டங்களுக்குப் பசுமைக் கட்சித் தலைவர் லாரிசா வாட்டர்ஸ் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மாற்றியமைக்கப்பட்ட இந்த மசோதாக்கள் வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளன.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!