ஐரோப்பா

கிர்கிஸ்தான்- மத்திய ஆசியாவின் ஆக உயரமான லெனின் உருவச்சிலை அகற்றம்

பழம்பெரும் சோவியத் புரட்சியாளர் விளாடிமிர் லெனினின் உருவச்சிலையை கிர்கிஸ்தான் அகற்றியுள்ளது.

இது, மத்திய ஆசியாவின் ஆக உயரமான லெனின் சிலை எனக் கூறப்படுகிறது.23 மீட்டர் உயரமுள்ள இந்தச் சிற்பம், சோவியத் யூனியனில் கிர்கிஸ்தான் அங்கம் வகித்திருந்தபோது எழுப்பப்பட்டது.

ஓஷ் நகரில் 50 ஆண்டுகளாக நின்றுகொண்டிருந்த உருவச்சிலை, இந்த வாரம் அகற்றப்பட்டது.

கம்யூனிசப் புரட்சியாளரான லெனினின் உருவச்சிலை தரையில் மல்லாந்து கிடக்க வைக்கப்பட்டதைக் காட்டும் படங்கள் வெளிவந்துள்ளன.

பாரந்தூக்கி ஒன்று சிலையை இறக்கி வைத்ததாகவும் பிபிசி வெளியிட்டுள்ள அறிக்கை குறிப்பிடுகிறது.

உள்கட்டமைப்புத் தேவைகளுக்காக சிலை அகற்றப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். சிலையை அகற்றும் முடிவை உள்ளூர் அதிகாரிகள் மட்டுப்படுத்தியபோதும் முன்னாள் சோவியத் யூனியனிடமிருந்து பிரிந்த குடியரசுகள், தங்களது அடையாளங்களில் ரஷ்யாவுடன் கொண்டுள்ள தொடர்புகளைக் குறைக்க முற்பட்டுள்ளதாகக் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

இந்தச் சிலைக்குப் பதிலாகக் கொடிக்கம்பம் ஒன்று அங்கு வைக்கப்படும்.சோவியத் யூனியன் 34 ஆண்டுகளுக்கு முன்னர் சிதைந்ததை அடுத்து கிர்கிஸ்தான் சுதந்திரம் பெற்றது.

சிலைகள் அகற்றப்பட்டாலும் கிர்கிஸ்தானில் சோவியத் யூனியனுடனான அதன் வரலாற்றுச் சான்றுகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. உதாரணத்திற்கு, அந்நாட்டின் இரண்டாவது ஆக உயரமான மலையின் பெயரே லெனின் பீக்.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்