தொழில் வாய்ப்பு வழங்கும் குவைத் – இலங்கையர்களும் விண்ணப்பிக்கலாம்
தொழில் வாய்ப்பு வழங்கும் குவைத் – இலங்கையர்களும் விண்ணப்பிக்கலாம்
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான குவைத், உள்ளூர்வாசிகளும் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களும் விண்ணப்பிக்கும் வகையில், 1,090 புதிய வேலைவாய்ப்புகள் அடங்கிய வருடாந்தர வரவுசெலவுத் திட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கணக்காளர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட வேலைவாய்ப்புகளும் அவற்றில் அடங்கும். ஆனால், அவற்றுக்கும் வெளிநாட்டவர்கள் விண்ணப்பிக்கலாமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
குறிப்பாக, நகராட்சி நிர்வாகம் சார்ந்த வேலைகள் அனைத்தும் குவைத் குடிமக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இவ்வாண்டு ஏப்ரல் முதல் புதிய வரவுசெலவுத் திட்டம் நடப்பிற்கு வரும். அதில் சம்பளம், படிகளுக்கு மட்டும் 190 மில்லியன் குவைத் தினார் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, இப்போதைய வரவுசெலவுத் திட்டத்தைக் காட்டிலும் 9 மில்லியன் தினார் அதிகம்.
குவைத் அரசாங்கத் துறையில் கிட்டத்தட்ட 483,000 பேர் பணிபுரிகின்றனர். அவர்களில் கிட்டத்தட்ட 23 சதவீதமானோர் வெளிநாட்டவர்கள்.
அண்மைய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 4.6 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட குவைத்தில் கிட்டத்தட்ட 3.2 மில்லியன் பேர் வெளிநாட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, வெளிநாட்டு ஊழியர்களை அகற்றிவிட்டு, தனது குடிமக்களுக்காக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகளைக் குவைத் தீவிரப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.