யாழில் அதிகளவு ஹெரோயினை நுகர்ந்த குருநாகல் இளைஞன் மரணம்!

யாழ்ப்பாணம் – கல்வியங்காடு பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவில் நுகர்ந்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
குருநாகல் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மின்சார உபகரண விற்பனைக்காக குறித்த இளைஞன் யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் கல்வியங்காட்டில் அவர் நேற்றையதினம் உபகரணங்களை விற்பனை செய்து கொண்டிருந்த வேளை மயங்கி விழுந்துள்ளார்.
பின்னர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது இளைஞன் உயிரிழந்துள்ளான்.
ஹெரோயினை பாவித்துவிட்டு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதுடன் அதிக ஹெரோயினை பாவித்தமையால் குறித்த மரணம் நிகழ்ந்துள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 12 times, 1 visits today)