குருந்தூர் மலை விவகாரம் : பிரிவினைவாத மோதல் ஏற்படும் என எச்சரிக்கை!
முல்லைத்தீவு குறுந்தூர் பௌத்த விகாரையை தமிழ் இந்து கோவிலாக மாற்றும் முயற்சி இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீர குறிப்பிடுகின்றார்.
இந்த பிரச்சனையால் மதவாத, இனவாத, பிரிவினைவாத மோதல் உருவாகலாம் என இந்திய புலனாய்வு அமைப்புகள் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
தொல்பொருள் திணைக்களம் தனது பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றாமையே இதற்குக் காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் இலங்கையின் தொல்பொருள் பாரம்பரியத்தின் பாதுகாவலராக இருக்கும் போதே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பௌத்த விகாரையை இந்து தமிழ் ஆலயமாக மாற்றும் நடவடிக்கை அமுற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், இந்நிலைமைக்கு தொல்பொருள் திணைக்களமே பொறுப்பு எனவும், தொல்பொருட்கள் கட்டளைச் சட்டத்தை மீறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.