குமார தர்மசேன உள்ளிட்டவர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் நடுவரும் இலங்கை தேசிய அணியின் முன்னாள் வீரருமான குமார தர்மசேன உட்பட 12 பேருக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதன்படி, அவர்கள் வரும் 12ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தர்மசேனவுக்குச் சொந்தமான வர்த்தக நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் 12 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
குமார் தர்மசேனா இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(Visited 6 times, 1 visits today)