மீண்டும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகும் குமார் சங்கக்கார
2026ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் முன்னாள் இலங்கை அணியின் தலைவரான குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் உரிமைக்குரிய பிரான்சைஸிகளின் கிரிக்கெட் பணிப்பாளராக சங்கக்கார பதவி உயர்வு பெற்றிருந்தார்.
தற்போது தலைமைப் பயிற்சியாளராகவும் இரட்டைப் பொறுப்பை வகிக்கவுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2025 ஐபிஎல் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருந்த ராகுல் ட்ராவிட்டிற்குப் பதிலாக சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி, ராஜஸ்தான் அணி கடைசிக்கு முந்தைய இடத்தில் முடித்ததைத் தொடர்ந்து, ட்ராவிட் அதிர்ச்சியளிக்கும் விதமாக அணியிலிருந்து விலகினார்.
டிசம்பர் 16 ஆம் திகதி அபுதாபியில் நடைபெறவிருக்கும் ஏலத்திற்காக ராஜஸ்தான் ரோயல்ஸ் தயாராகி வரும் நிலையில், சங்கக்கார அனைத்து முக்கிய முடிவுகளிலும் ஈடுபடுவார்.
அவர் 2021 முதல் 2024 வரை தலைமைப் பயிற்சியாளராக வகித்த பொறுப்புக்கு மீண்டும் திரும்புகின்றமை குறிப்பிடத்தக்கது.





