செய்தி விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த கோன்ஸ்டாஸ்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சாம் கோன்ஸ்டாஸ் 92 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார். விராட் கோலி ஸ்லெட்ஜிங் செய்ததை தொடர்ந்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் சாம் கோன்ஸ்டாஸ் இன்று இணையம் முழுவதும் பிரபலமடைந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று சம நிலையில் இருக்கின்றன.

மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இன்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியின் தொடக்க வீரர் சாம் கோன்ஸ்டாஸ் 65 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் 2 சிக்சரும் 6 பவுண்டரியும் அடங்கும். சாம் கோன்ஸ்டாசுக்கு முதல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாகும். 19 வயதாகும் அவர் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் அவருக்கு சர்வதேச போட்டியில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தனது அறிமுக போட்டியிலேயே அவர் அரை சதம் அடித்து கவனம் பெற்றுள்ளார். 92 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான முதல் மேட்ச்சில் அரை சதம் அடிக்கும் மிகவும் இளமையான வீரர் என்ற சாதனையை சாம் கோன்ஸ்டாஸ் ஏற்படுத்தியுள்ளார்.

19 வயது மற்றும் 85 நாட்கள் நிறைவு பெற்ற நிலையில் அவர் இந்த சாதனையை ஏற்படுத்தியிருக்கிறார். இதற்கிடையே மேட்சின் போது அவருக்கும் விராட் கோலிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி