இலங்கை

திருமலை- எத்தாபெந்திவெவ பகுதியல் உயிரிழந்த நிலையில் கண்டுபிடுக்கப்பட்ட கொம்பன் யானை

திருகோணமலை- எத்தாபெந்திவெவ வயல் பகுதியில் யானையொன்று உயிரிழந்ததை தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக வனவிலங்கு திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.25 வயது மதிக்கத்தக்க 7 அடி நீளமான கொம்பன் யானையொன்றே உயிரிழந்துள்ளது.

கடந்த வாரங்களில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து வந்தமையும், ஊருக்குள் புகுந்து வீடுகளையும் வீட்டு தோட்டங்களையும் சேதப்படுத்தி வருவதாகவும் பிரதேச மக்கள் பலர் முறைப்பாடு செய்திருந்தனர்.இந்நிலையிலேயே இவ் உயிரிழந்த யானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் யானையின் வாயில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் யானை உயிரிழந்தமை தொடர்பில் திருகோணமலை நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் வன விலங்கு அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

யானை மரணித்தமை தொடர்பாக மிருக வைத்திய நிபுணர் சம்பவ இடத்திற்கு நாளை வருகை தர உள்ளதுடன் பிரேத பரிசோதனைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் வனவிலங்கு திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

அத்துடன் மொறவெவ பொலிஸார் புலன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!