சங்கக்காரவை முந்திச் செல்ல கோலிக்கு இன்னும் 54 ரன்கள் மட்டுமே தேவை
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரராகக் குமார் சங்கக்காரரை முந்திச் செல்ல இந்திய வீரர் விராட் கோலிக்கு இன்னும் 54 ரன்கள் மட்டுமே தேவைப்படுகின்றது.
51 சதங்கள் மற்றும் 74 அரைசதங்கள் அடித்த கோலி, தற்போது 304 போட்டிகளில் 14,181 ரன்கள் எடுத்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் குமார் சங்கக்கார ஆவார். இவர் 404 போட்டிகளில் 14,234 ரன்கள் எடுத்துள்ளார்.
சங்கக்கார ஓய்வு பெற்றபோது 25 சதங்கள் மற்றும் 93 அரைசதங்களை அடித்திருந்தார்.
உலகின் அதிக ஒருநாள் ரன் அடித்த வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். இவர் 463 போட்டிகளில் 18,426 ரன்கள் எடுத்துள்ளார், இதில் 49 சதங்கள் மற்றும் 96 அரைசதங்கள் அடங்கும்.
தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணியின் ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டி இன்று சிட்னியில் நடைபெற உள்ளது.





