ஓட்டங்களை அதிவேகமாகக் கடந்த வீரராக கோஹ்லி சாதனை

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 14,000 ஓட்டங்களை அதிவேகமாகக் கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோஹ்லி படைத்துள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் அவர் குறித்த மைல்கல்லை எட்டினார்.
இதன்படி விராட் கோஹ்லி 287 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள நிலையில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அத்துடன் குறித்த வரிசையில் 350 இன்னிங்ஸ்களில் 14,000 ஓட்டங்களைக் கடந்து சச்சின் டெண்டுல்கர் இரண்டாவது இடத்திலும், 378 இன்னிங்ஸ்களில் 14,000 ஓட்டங்களைக் கடந்து குமார சங்கக்கார மூன்றாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)