உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நக்கிள்ஸ் காடு நீக்கப்படும் அபாயம்
உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நக்கிள்ஸ் காப்புக்காடு நீக்கப்படும் அபாயம் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சுற்றுசூழல் உணர்திறன் வலயத்தின் ஊடாக உயர் அழுத்த மின் அமைப்புகள் இழுக்கப்படுவதால் இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளது.
மாத்தளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சுற்றாடல் குழு கூட்டத்திலேயே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இரத்தோட்ட மத்தவத்தை பிரதேசத்தில் இருந்து றிவஸ்டன் ஊடாக ஏறக்குறைய மூன்று கிலோமீற்றர் தூரத்தை வரைய தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அவ்வாறு மேற்கொள்ளப்பட்டால் இதன் ஊடாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கு மாற்றாக நிலத்தடி மின் வயரிங் ஏற்பாடு செய்து அதற்கான செலவை பசுமை காலநிலை நிதியில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும் என சுற்றுச்சூழல் ஆர்வலர் சுட்டிக்காட்டியுள்ளார்.