ஜப்பானில் ரப்பர் தொழிற்சாலையில் கத்தி குத்து தாக்குதல் – பலர் படுகாயம்!
ஜப்பானில் இன்று இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் ஏறக்குறைய 15 பேர் காயமடைந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மிஷிமா (Mishima) நகரில் உள்ள யோகோகாமா (Yokohama) ரப்பர் தொழிற்சாலையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் அவசர சேவைளுக்கு 05 பேர் கத்தி குத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
30 வயதுடைய தாக்குதல்தாரி குறித்த தகவல்களை காவல்துறையினர் வெளியிடவில்லை.
பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு ஏனைய தகவல்களை காவல்துறையினர் வெளியிடவில்லை எனவும், சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





