ஜப்பானில் பொழுதுபோக்கு பூங்காவில் கத்திக்குத்து தாக்குதல் – இருவர் படுகாயம்!
ஜப்பானின் தெற்கு நகரமான ஃபுகுவோகாவில் (Fukuoka) உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் இன்று இருவேறுப்பட்ட கத்திக்குத்து தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தாக்குதாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தாக்குதாரி மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபரின் நோக்கங்கள் உட்பட கூடுதல் விவரங்களை வழங்க மறுத்துவிட்டனர், மேலும் இரண்டாவது கத்திக்குத்து குறித்தும் அவர்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.





