மன்னர் மூன்றாம் சார்லஸ் கென்யா நாட்டுக்கு விஜயம்
மன்னர் மூன்றாம் சார்லஸ் இந்த மாதம் கென்யா நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார்
கென்யா பிரிட்டனில் இருந்து சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளைக் கொண்டாடத் தயாராகி வருகின்றது.
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி ராணி கமிலா ஆகியோர் கென்யாவுக்கு நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக இம்மாத இறுதியில் இருந்து செல்லவுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை புதன்கிழமை அறிவித்துள்ளது.
கென்ய ஜனாதிபதி வில்லியம் ரூடோ, இந்த விஜயத்திற்கு அரச தம்பதியினரை அழைத்துள்ளார்,
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி ராணி கமிலா ஆகியோர் கென்யாவிற்கு 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் திகதி முதல் நவம்பர் 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான அன்பான உறவையும், அவர்கள் தொடர்ந்து உருவாக்கி வரும் வலுவான மற்றும் ஆற்றல்மிக்க கூட்டாண்மையையும் கொண்டாடுவார்கள்” என்று அரண்மனை தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பரில் மன்னராக பதவியேற்ற பிறகு சார்லஸ் III காமன்வெல்த் நாட்டிற்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவாகும்.
இரு நாடுகளும் பல்வேறு பிரச்சனைகளில் எவ்வாறு இணைந்து செயல்படுகின்றன என்பதை இந்த திட்டம் பிரதிபலிக்கும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.