பிரித்தானிய மன்னருக்கு புற்றுநோய்!! வெளியான அதிர்ச்சி தகவல்

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்றுநோய்க்கு சிகிச்சைபெற்று வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணி இரண்டாம் எலிசபெத் மறைவையடுத்து அவரது மகன் சார்லஸ் பிரித்தானிய மன்னராக கடந்த 2022ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு பின் முறைப்படி மன்னர் மூன்றாம் சார்லஸாக முடிசூட்டிக்கொண்டார்.
இவர் புராஸ்டேட் சுரப்பி வீக்கம் அறுவை சிகிச்சைக்காக கடந்த சில தினங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகின.
எவ்வாறாயினும் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்று வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 13 times, 1 visits today)