நீண்ட தூர ஏவுகணை மற்றும் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை பார்வையிட்ட கிம்!
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் ( Kim Jong Un) நாட்டின் புதிய நீண்ட தூர ஏவுகணை சோதனைகளை மேற்பார்வையிட்டுள்ளார்.
கிழக்கு கடற்கரைக்கு அருகிலுள்ள ஏவுகணை ஏவுதளத்திலிருந்து வட கொரியத் தலைவர் சோதனைகளை மேற்பார்வையிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சோதனை செய்யப்படும் புதிய நீண்ட தூர ஏவுகணைகள் 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே தென்கொரியா, அமெரிக்காவுடன் இணைந்து அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் முயற்சியையும் கிம் கடுமையாக சாடியுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.





