இராணுவ அணுசக்தி திட்டத்தின் வரம்பற்ற விரிவாக்கத்திற்கு அழைப்பு விடுக்கும் கிம்!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வெற்றியை தொடர்ந்து ட்ரம்ப் தலைமையிலான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் தனது இராணுவ அணுசக்தி திட்டத்தை “வரம்பற்ற” விரிவாக்கத்திற்கான தனது அழைப்பை புதுப்பித்துள்ளார்.
இராணுவ அதிகாரிகளுடனான ஒரு மாநாட்டில் பேசிய கிம், தென் கொரியாவுடன் அதன் அணுசக்தி தடுப்பு உத்திகளை புதுப்பிப்பதற்கும், ஜப்பானை உள்ளடக்கிய மூன்று வழி இராணுவ ஒத்துழைப்பை உறுதிப்படுத்துவதற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
நீண்டகால ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராக உக்ரைனுக்கு ஆதரவளித்த அமெரிக்காவையும் கிம் விமர்சித்தார்.
வாஷிங்டனும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளும் உக்ரைனை தங்கள் “அதிர்ச்சி துருப்புகளாக” பயன்படுத்தி மாஸ்கோவிற்கு எதிராக போரை நடத்தவும், அமெரிக்க இராணுவ செல்வாக்கின் நோக்கத்தை விரிவுபடுத்த வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
இந்நி்லையில் சமீபத்திய மாதங்களில் ரஷ்யாவுடனான தனது நாட்டின் உறவுகளுக்கு முன்னுரிமை அளித்தார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை அவர் தனது அணுஆயுத இராணுவத்தின் வளர்ச்சியை அடுத்த மைல்கல்லுக்கு கொண்டு செல்ல பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
அது இப்போது தென் கொரியாவை குறிவைக்கும் பல்வேறு அணுசக்தி திறன் கொண்ட அமைப்புகளையும், அமெரிக்க நிலப்பகுதியை அடையக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் கொண்டுள்ளது.