சிங்கப்பூரில் அதிகரித்து வரும் சிறுநீரக நோயாளிகள்!
சிங்கப்பூரில் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சமீப காலத்தில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி கடந்த தசாப்தத்தில் இங்கு சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. கணிசமாக அதிகமான ஆண்கள் மற்றும் மலாய்க்காரர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
2022 இல் சிறுநீரக செயலிழப்பால் ஐந்தில் மூன்று பேர் ஆண்கள் பாதிக்கப்படுவதாகவும், குறிப்பாக சீனர்களை விட மூன்று மடங்கு அதிகமான மலாய்க்காரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுநீரக செயலிழப்பு, அல்லது ஐந்தாவது-நிலை நாள்பட்ட சிறுநீரக நோய் (CKD5), சிறுநீரகங்கள் செயல்படும் திறனை இழக்கும் போது ஏற்படுகிறது, இதன் விளைவாக உடலில் கழிவு பொருட்கள் மற்றும் திரவம் குவிந்துவிடும்.
2018 ஆம் ஆண்டு இண்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் நெப்ராலஜியில் ஒரு கட்டுரையில் வெளியிடப்பட்ட நேஷனல் ஹெல்த்கேர் குரூப் மற்றும் நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூர் ஆகியவற்றின் நிபுணர்களின் கணிப்புகளின்படி 2035 ஆம் ஆண்டளவில் அண்ணலாகா 09 இலட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்படுவார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2012 மற்றும் 2022 க்கு இடையில் டயாலிசிஸ் தொடங்கும் நோயாளிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இப்போது, ஒரு நாளைக்கு நான்கு புதிய டயாலிசிஸ் நோயாளிகள் இனங்காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.