ஆஸ்திரேலியா- இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்திய தூதர் மன்ப்ரீன் வோரா, தூதரக அதிகாரி சுஷில் குமார் உள்ளிட்டோருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
காலிஸ்தான் இயக்கத்தை சேர்ந்த நிஜார் என்பவரின் படுகொலைக்கு இவர்கள்தான் காரணம் என்ற சுவரொட்டிகள் இந்த இரண்டு அதிகாரிகளின் படங்களுடன் ஒட்டப்பட்டுள்ளன.
கனடாவில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆஸ்திரேலியாவிலும் தங்கள் இருப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்தியர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் படி ஆஸ்திரேலிய அரசை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
(Visited 17 times, 1 visits today)





