ஊனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக கொடுப்பனவுகள் குறித்து முக்கிய முடிவு

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் சிறுநீரக கொடுப்பனவுகளை ஜனவரி மாதம் முதல் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
5,000 ரூபாவாக இருந்த ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக கொடுப்பனவுகள் ரூபா 7,500 ஆக அதிகரிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
மேலும், 2,000 ரூபாயாக இருந்த முதியோர் உதவித்தொகை, 3,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்.
தற்போது நிவாரணப் பயனாளி குடும்பங்களில் உள்ள ஊனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக பயனாளிகள் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அடையாளம் காணப்படுவார்கள்.
அதன் பின்னர், அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவுகள் ஏப்ரல் முதலாம் திகதி முதல் அவர்களுக்கு வழங்கப்படும் என நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
(Visited 10 times, 1 visits today)