பிரான்ஸ் ஜனாதிபதி பிரித்தானிய பிரதமருடன் தொலைபேசியூடாக முக்கிய உரையாடல்
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்குடன் தொலைபேசியூடாக உரையாடியுள்ளார்.
இரு தலைவர்களும், ஹாசா பகுதியில் போர் முனையில் சிக்கிக்கொண்டுள்ள மக்களுக்கு அவசரகால உதவிகளை வழங்குவது தொடர்பில் கலந்தாலோசித்துள்ளனர்.
ஹாசா மக்களுக்கு உணவு, குடிநீர், எரிபொருள் மற்றும் அத்தியாவசியமான மருத்துவப்பொருட்களை வழங்குவதற்கு இரு நாடுகளும் இணைந்து செயற்பட உள்ளதாக இங்கிலாந்து பிரதமர் மாளிகை தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஹாசா மக்களுக்கு தேவையான உலர் உணவுகள், மருத்துவப் பொருட்களை தாங்கிய கப்பல் ஒன்றை பிரான்ஸ் அனுப்பி உள்ளமை குறிப்பிடத்தக்கது.





