பாலியல் பலாத்காரம் குற்றச்சாட்டில் கேரள யூடியூபர் கைது
சமூக ஊடகங்கள் மூலம் நட்பாக பழகிய ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக 25 வயது யூடியூபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவரின் புகாரின் அடிப்படையில், கோழிக்கோட்டைச் சேர்ந்த முகமது நிஷாலை களமசேரி போலீசார் கைது செய்ததாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகாரின்படி, யூடியூபர் அந்தப் பெண்ணின் ஆட்சேபனைக்குரிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டி இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அவரது கணவருக்கும் அனுப்புவதாக மிரட்டியதாகவும் புகாரை மேற்கோள் காட்டி போலீசார் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் இதே போன்ற வழக்குகள் இருப்பதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.





