துபாயில் உயரமான கட்டிடத்தில் இருந்து விழுந்து கேரள இளைஞர் மரணம்
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச்(United Arab Emirates) சென்றிருந்த 19 வயது கேரள இளைஞர் ஒருவர், துபாயின்(Dubai) டெய்ராவில்(Deira) உள்ள ஒரு கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
கேரளாவின்(Kerala) கோழிக்கோடு(Kozhikode) மாவட்டத்தில் வசிக்கும் முகமது மிஷால், தனது உறவினர்களைப் பார்க்கச் சென்று 15 நாட்கள் துபாயில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புகைப்பட ஆர்வலராக இருந்த மிஷால், விபத்து நடந்தபோது விமானங்களின் புகைப்படம் எடுக்க பல மாடி கட்டிடத்தின் மேல் ஏறிச் சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது.
“அவர் புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். விமான நிலையம் அருகில் இருந்ததால், நெருக்கமான காட்சியைப் பிடிக்க முயன்றபோது, அவரது கால் இரண்டு குழாய்களுக்கு இடையில் சிக்கி சமநிலையை இழந்து தரையில் விழுந்திருக்கலாம்,” என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்துக்குப் பிறகு மிஷால் உடனடியாக ரஷீத்(Rashid) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.





