செய்தி

அதானி குழுமத்துடன் முன்மொழியப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்த கென்யா

சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக 2,100 கோடி லஞ்சமாக இந்திய அரசு அதிகாரிகளுக்கு அதானி கொடுத்ததாகவும், அதனை மறைத்து அமெரிக்காவிடம் முதலீடுகளை பெற்றதாகவும் நியூ யார்க் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கௌதம் அதானி குழுமத்துடனான பல கோடி டாலர் விமான விரிவாக்க திட்டத்தையும் எரிசக்தி ஒப்பந்தங்களை ரத்து செய்ய கென்ய அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், “நமது புலனாய்வு முகமைகள் மற்றும் நட்பு நாடுகள் அளித்துள்ள புதிய தகவல்களின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்திருப்பதாகத்” தெரிவித்துள்ளார்.

கென்ய தலைநகர் நைரோபியில், அந்நாட்டின் முக்கிய விமான நிலையமான நைரோபி விமான நிலையத்தை நவீனமயமாக்கும் நடவடிக்கைகளுக்கான ஒப்பந்தத்தில் அந்நாட்டு அரசுடன் அதானி குழுமம் கையெழுத்திட ஆயத்தமாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம், அந்த விமான நிலையத்தை அடுத்த 30 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் பொறுப்பு அதானி குழுமத்துக்கு வழங்கப்படுவதாகவும் இருந்தது.

(Visited 3 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி