கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து ராபர்ட் ஜென்ரிக் நீக்கம்
பிரித்தானிய எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கட்சியின் தலைவர் கெமி பேடனாக்கிற்குப் (Kemi Badenoch) போட்டியாளராக விளங்கிய ராபர்ட் ஜென்ரிக் (Robert Jenrick), நிழல் அமைச்சரவையிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
ஜென்ரிக் ரகசியமாக வேறு கட்சிக்குத் தாவத் திட்டமிட்டதற்கான “மறுக்க முடியாத ஆதாரங்கள்” கிடைத்துள்ளதாகக் கூறி, அவரது கட்சி உறுப்புரிமையை பேடனாக் இடைநீக்கம் செய்துள்ளார்.
“அரசியல் நாடகங்களால் மக்கள் சலிப்படைந்துள்ளனர்; பழைய தவறுகளைத் திரும்பச் செய்யமாட்டேன்” எனப் பேடனாக் தெரிவித்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை பிரித்தானிய அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.





