கெஹலிய ரம்புக்வெல்லவை உடனடியாக கைது செய்ய வேண்டும் – சரத் பொன்சேக்கா வலியுறுத்தல்!
 
																																		முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை திருத்தம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், ரம்புக்வெல்லவின் அமைச்சுப் பதவியை மாற்றுவது போதாது எனவும் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
(Visited 9 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
