கெஹலிய ரம்புக்வெல்ல எந்த தவறும் செய்யவில்லை!
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எந்த தவறும் செய்யவில்லை என்றும், அவரின் சரியான தன்மைக்காக கட்சி அவர் பக்கம் நிற்கிறது என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க கட்சியாக செயற்படுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சியின் அமைப்பும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அடுத்த ஜனாதிபதிக்கு பொருத்தமான தலைவர்கள் தொடர்பில் கலந்துரையாடி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 31 times, 1 visits today)





