ஈரானை கட்டுப்படுத்தி அமெரிக்கா போரில் வெற்றி பெற்றுள்ளது
பென்டகன் செய்தியாளர் சந்திப்பில், பீட் ஹெக்ஸெத் (Pete Hegseth) அமெரிக்காவின் போரின் நிலையை வலியுறுத்தினார்.
இங்கு மேலும் அவர் கூறியதாவது,
“போர் சில விடயங்களில் எதிர்பார்த்த அளவுக்கு சிக்கலாக இருப்பினும், அமெரிக்கா வெற்றி பெற்றுள்ளது.
அமெரிக்கா ஈரான் மீது பெரும் சக்தியைப் பயன்படுத்தி, அதன் ஏவுகணைகள், தாக்குதல் தளங்கள் மற்றும் கடற்படையை அழித்து வருகிறது” என்றார்.
ஆனால், ஹார்முஸ் நீரிணை (Hormuz Strait) கட்டுப்பாடு, உலகளாவிய சந்தைகளில் ஏற்படும் தாக்கங்கள், ஈரான் மற்றும் இஸ்ரேல் தாக்குதல்கள், கட்டாருக்கு எதிரான ஈரானின் பதிலடி போன்ற பரிணாமங்கள் பற்றி அவரது அறிக்கையில் குறிப்பிடப்படவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை அமெரிக்கா, இஸ்ரேலை தன் விருப்பப்படி செயல்பட அனுமதிக்கிறதா என்ற கேள்வியும் அவரிடம் எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த, ஹெக்ஸெத்
“அதிகாரம் எங்கள் கையில் உள்ளது, எங்களுக்கு நோக்கங்கள் உள்ளன, அந்த நோக்கங்கள் தெளிவானவை… ஈரானின் தலைவிதியை அமெரிக்க இராணுவமே கட்டுப்படுத்துகிறது” என்றார்.





