இலங்கையை உலுக்கிய பல்கலைக்கழக பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை உயர்வு

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) மூன்றாவது மாணவர், நவம்பர் 1 ஆம் திகதி பதுளையில் இடம்பெற்ற பயங்கரமான பேருந்து விபத்தில் காயமடைந்து உயிரிழந்துள்ளார்,
இதனால் இறப்பு எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
யாழ்ப்பாணம் கந்தர்மடத்தைச் சேர்ந்த 24 வயதான கயிலைநாதன் சிந்துஜன் பல்கலைக்கழக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (23) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவன்.
நவம்பர் 1 ஆம் திகதி பதுளை துன்ஹிந்த வீதியில் KDU மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் இரு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் 39 பேர் காயமடைந்தனர்.
இறந்தவர்களில் KDU இன் தெற்கு வளாகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவிகளும் அடங்குவர்.
(Visited 8 times, 1 visits today)