பகவத் கீதை மீது சத்திய பிரமாணம் செய்து பதவியேற்ற காஷ் படேல்

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான FBIயின் புதிய இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நியமனம் செய்திருந்தார்.
இந்நிலையில், இந்துக்களின் புனித நூலான பகவத்கீதை மீது சத்தியம் செய்தபடி காஷ் படேல் FBI இயக்குனராக பதவியேற்றுக் கொண்டார்.
அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய காஷ் படேல், நான் அமெரிக்கக் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அமெரிக்க கனவு இறந்துவிட்டதாக நினைக்கும் எவரும், இங்கே பாருங்கள்.
உலகின் மிகப் பெரிய தேசத்தின் சட்ட அமலாக்க முகமைக்கு தலைமை தாங்கவிருக்கும் முதல் தலைமுறை இந்தியருடன் நீங்கள் பேசுகிறீர்கள்.
அது வேறெங்கும் நடக்காது. FBIகுள்ளும் அதற்கு வெளியேயும் பொறுப்பு இருக்கும் என உறுதியளிக்கிறேன் என தெரிவித்தார்.
(Visited 2 times, 1 visits today)