கரூர் பிரச்சார கூட்டம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு

கரூர் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்களின் தேர்தல் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
30 உடல்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள உடல்களை பிரேதப் பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆரம்பத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக இருந்த போதும் பின்னர் மீட்பு நடவடிக்கை மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் எண்ணிக்கை சடுதியாக உயர்ந்தது.
இறுதியாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 31 வயதுடைய கவின் எனும் இளைஞர் உயிரிழந்துள்ளார்.
தற்போது இவருடன் சேர்த்து 14 ஆண்கள், 17 பெண்கள், 4 ஆண் குழந்தைகள், 5 பெண் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு கரூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.