கார்த்தியின் அசுர வேட்டை: ‘வா வாத்தியார்’ பொங்கல் திரை விமர்சனம்!
இயக்குநர் நலன் குமாரசாமியின் இயக்கத்தில கார்த்தி நடிச்சு, இந்தப் பொங்கல் தினத்தில் வெளியாகியிருக்கிற ‘வா வாத்தியார்’ படம், சினிமா ரசிகர்கள் மத்தியில நல்லதொரு வரவேற்பைப் பெற்றிருக்கு.
அந்நியன் தாக்கம்: ‘அந்நியன்’ படத்தில விக்ரம் எப்படித் தனக்குள்ளயே ரெண்டு மூன்று குணங்களை மாத்தி மாத்தி வெளிப்படுத்துவாரோ, அதே மாதிரி கார்த்தியும் இதில ‘எம்.ஜி.ஆர்’ ரசிகனாகவும், இன்னொரு பக்கம் ‘நம்பியார்’ போன்ற வில்லத்தனமான குணத்துடனும் நடிப்பில் பித்து உதறியுள்ளார்.
பழைய காலத்துத் தமிழ் சினிமா பாணியில அவர் பேசும் வசனங்களும், அந்த நளினமான உடல்மொழியும் படத்துக்குப் பெரிய பலமாக அமைந்துள்ளது.

மேலும் நலன் குமாரசாமி எப்போதுமே வித்தியாசமான கதைகளையே தருவார். இதிலயும் ஒரு ‘பேண்டஸி’ (Fantasy) விசயத்தை உள்ள புகுத்தி, அதை எம்.ஜி.ஆர் பாடல்களோட இணைச்ச விதம் புதுசா இருக்கு.
கதைச் சுருக்கம் தாத்தாவுக்காகத் திருந்தி வாழ்ற மாதிரி நடிக்கும் பேரன், பின்னாடி என்ன மாதிரியான சிக்கல்ல மாட்டுகிறான் என்பதுதான் கதை. முதல் பாதி ‘கலகலப்பாக’ நகருது, ஆனால் இரண்டாம் பாதியில கொஞ்சம் வேகம் குறையுற மாதிரித் தெரிகிறது.
ஆனல் ஐயா ராஜ்கிரண் வழக்கம் போலத் தனது எதார்த்தமான நடிப்பால மனசைத் தொடுகிறார்.
‘சனா’வின் இசை இந்தப் படத்துக்குப் பெரிய ஊக்கம். பழைய மெட்டுக்களைப் புதுப்பிச்சுப் போட்டிருக்கிற விதம் ‘மனதை அள்ளுகிறது’.

இதில் கீர்த்தி ஷெட்டிக்குப் பெரிய வேலை இல்லை என்றாலும், வரும் இடங்களில் எல்லாம் அழகாகத் தெரிகிறார்.
“கார்த்தியின் அபாரமான நடிப்புக்காகவும், அந்த வித்தியாசமான கதைக்களத்துக்காகவும் ‘வா வாத்தியார்’ படத்தை ஒருக்கா தியேட்டருக்குப் போய் தாராளமாகப் பார்க்கலாம். குடும்பத்தோட பொங்கல் விடுமுறையை சந்தோசமா கழிக்க இது ஒரு நல்ல சாய்ஸ்!”





