கர்நாடகா பெண்ணுக்குப் புதிய வகை இரத்தம் – உலகத்தில் இதுவரை பதிவு செய்யப்படாத வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு, உலகத்தில் இதுவரை யாரிடமும் கண்டறியப்படாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவ துறையில் முக்கியமான புதிய கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது.
அந்த பெண், இருதய அறுவை சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, மேற்கொள்ளப்பட்ட இரத்த சோதனையில் தன்னுடைய இரத்தம் “O Rh-Positive” வகை என ஆரம்பத்தில் பதிவு செய்யப்பட்டது.
எனினும், மேலும் சிக்கலான பரிசோதனைகளுக்காக அவரது இரத்த மாதிரி இங்கிலாந்தில் உள்ள சர்வதேச ரத்த வகை ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டது. 10 மாதங்கள் நடைபெற்ற ஆய்வுகளுக்குப் பிறகு, இந்த ரத்தம் உலகத்தில் இதுவரை பதிவு செய்யப்படாத தனித்துவமிக்க புதிய வகை என அங்கிருந்து உறுதிசெய்யப்பட்டது.
இந்த புதிய ரத்த வகையின் கட்டமைப்பு மற்றும் அதன் தனிச்சிறப்புகள் குறித்து தற்போது மேலதிக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. நிபுணர்கள் கூறுகையில், இந்த வகை ரத்தம்,
வழக்கத்திற்கு மாறான ரத்தக்கழிவுகள் மற்றும் மாற்றங்கள் ஆகிய சிக்கல்களுக்கு தீர்வாக,
கடுமையான ரத்த குழப்பங்களுக்கு மாற்றீடாக,
மேலும் ஜெனெடிக்ஸ் மற்றும் இம்யூனாலஜி சார்ந்த எதிர்கால மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு புதிய வழிகள் திறக்கும் எனத் தெரிகிறது.
இந்த அரிய கண்டுபிடிப்பு, இந்திய மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி துறைக்கு ஒரு முக்கியமான சாதனையாகவும், சர்வதேச அறிவியல் உலகத்தில் கவனம் பெற்ற முன்முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.