கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் : முன்னிலையில் காங்கிரஸ் கட்சி!
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இதையடுத்து அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடக சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையில் 12 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி – 120, பாஜக – 73, மஜத – 25, மற்றவை- 6 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகின்றன.
ஷிக்கான் தொகுதியில் முதல்வர் பசவராஜ் பொம்மை முன்னிலை வகித்து வருகிறார். வருணா தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா முன்னிலையில் இருக்கிறார்.
கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் மாநிலத்தலைவர் டி.கே. சிவக்குமார் முன்னிலையில் இருக்கிறார்.
கர்நாடக சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் உள்ள 36 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் எண்ணப்பட்டு வருகின்றன.