இலங்கை செய்தி

கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கான உபகரணங்கள் கையளிப்பு!

பாதுகாப்பு அமைச்சினால் பெறப்பட்ட ஒரு தொகை உதவிப் பெருட்கள் ( 13) கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டது.

அவசர சிகிச்சைக்குரிய (ICU) படுக்கைகள், சக்கர நாற்காலிகள் மற்றும் குழந்தை தொட்டிகள் உள்ளிட்ட பொருட்கள் இவற்றில் அடங்கும்.

இது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை, நோயாளிகளின் நடமாட்டம் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ சேவைகளை மேட்கொள்ள மேலும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந் நன்கொடை பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவர் Dr. (திருமதி) ருவினி ரசிகா பெரேராவினால் வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரி – திட்டமிடல் Dr. டி.எம்.ஏ.வி.ஆர். முனசிங்க மற்றும் குழந்தை மருத்துவ விசேட வைத்தியர் Dr. கீதாஞ்சலி ஜயதிலக டி சில்வா ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.

சமூகநலம் முன்னேற்றம் சார்ந்த திட்டங்கள் மூலம் மிகவும் பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆதரிப்பதில் அமைச்சின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த நன்கொடை அடையாளப்படுத்துகிறது.

பாதுகாப்பு அமைச்சு மற்றும் கந்தளாய் ஆதார மருத்துவமனையின் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

AJ

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!