இலங்கை

கண்டி- காணாமல் போன மாணவன் மகாவலி ஆற்றிலிருந்து சடலமாக மீட்பு

கண்டி – தென்னேகும்புர பாலம் அருகே காணாமல் போன இரண்டு மாணவர்களில் ஒருவரின் சடலம் மகாவலி ஆற்றில் இருந்து இன்று மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட மாணவர் 14 வயதுடைய ஜெகதீஸ் என தெரியவந்துள்ளது.

நேற்று (09) இரு பாடசாலை மாணவர்கள் காணாமல் போனதாக காவல்துறைக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டது.

கண்டி நகரில் இரு பாடசாலைகளில் கல்வி கற்று வந்த ஜெகதீஷ் மற்றும் எம்.மிலான் ஆகியோர் நேற்று மாலை வளர்ப்பு மீன்களை கொள்வனவு செய்வதாக கூறி வீடுகளில் இருந்து திகன பகுதிக்கு சென்றுள்ளனர். இதற்கிடையில், குறித்த இருவரும் மகாவலி ஆற்றில் இறங்கி பாறைக் கரையில் இருந்ததாக அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

கண்டி தலைமையக காவல்துறை மற்றும் பலகொல்ல காவல்துறையும் இணைந்து காணாமல் போன மாணவர்களைத் தேடுவதற்காக கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டதுடன், மகாவலி ஆற்றில் தேடுவதற்காக கடற்படையின் சுழியோடிகளும் பயன்படுத்தப்பட்டிருந்தனர்.

இதன்போதே காணாமல் போயிருந்த ஒரு மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

(Visited 41 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்