ICCயின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்ற கமிந்து மெண்டிஸ்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டின் (2024) வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரருக்கான விருதை இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸ் வென்றார்.
கடந்தாண்டு மட்டும் கமிந்து மெண்டிஸ் சர்வதேச கிரிக்கெட்டில் 1,451 ரன்களை குவித்துள்ளார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 1049 ரன்களை அடித்துள்ளார்.
கடந்த 75 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை கமிந்து மெண்டிஸ் படைத்துள்ளார்.
மேலும், தொடர்ச்சியாக 8 டெஸ்ட் போட்டிகளில் அரை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படித்துள்ளார்.
(Visited 33 times, 1 visits today)