இலங்கை

களுத்துறை மாணவி உயிரிழப்பு; சந்தேக நபரின் அதிரவைக்கும் பின்னணி!

களுத்துறை பிரதேசத்தில் மாணவியொருவர் விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த நிலையில் கடந்த 08ம் திகதி பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தார்.

சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் நேற்றையதினம் கைதாகியிருந்த நிலையில், சந்தேக நபரை 48 மணிநேரம் பொலிஸாரிடம் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய களுத்துறை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இந்நிலையில் சம்பவத்தின் சந்தேக நபர் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. களுத்துறை இசுரு உயனே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய தனுஷ்க கயான் சஹபந்து என்பவரே மாணவியுடன் ஹோட்டலில் தங்கியிருந்தவர் ஆவார்.

களுத்துறை மாணவி உயிரிழப்பு; டிக்டொக் குண்டனின் அதிரவைக்கும் பின்னனி (Photos) | Kalutara Student Diesvibrant Background Of Tiktok

சந்தேக நபரான தனுஷ்க கயான் சஹபந்து டிக்டொக் சமூகவலைத்தளமூடாக பிரபலமானவராவார். இந்நிலையில் டிக்டொக் சமூக வலைத்தளமூடாக பல மாணவிகள் சந்தேக நபருக்கு அறிமுகமாகியுள்ளனர்.29 வயதுடைய தனுஷ்க கயான் சஹபந்து மூன்று திருமண முடித்தவர் என கூறப்படும் நிலையில் , இவரது வலையில் விழுந்த பல மாணவிகள் அவருடன் எடுத்துகொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

களுத்துறை மாணவி உயிரிழப்பு; டிக்டொக் குண்டனின் அதிரவைக்கும் பின்னனி (Photos) | Kalutara Student Diesvibrant Background Of Tiktok

இன்றைய காலகட்டத்தில் பல பெற்றோர்கள் தமது பிள்ளைகள் சமூகவலைதளங்களை பயன்படுத்துவது எத்தனை ஆபத்தானது என்பதை கண்டுகொள்வதில்லை.சமூகவலைத்தளகளின் அறிமுகமில்லாத நபர்களுடன் இளம் பிராயத்தினர் தொடர்புகளை பேணி வருவதால் அவர்களது வாழ்வும் திசைமாறி செல்வதுடன், மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுகின்றது.

குறித்த நபருடன் நெருக்கமாக நின்று பல இளம் பெண்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். அதேவேளை கழுத்துறையில் உயிரிழந்த மாணவி எந்தவொரு கெட்ட பழக்கமும் இல்லாதவர் என்றும், ஆண் நண்பர்களுடன் தனது மகள் பழகுவதில்லை எனவும் உயிரிழந்த மாணவியின் தாயார் கூறியிருந்தார்.இவ்வாறான நிலையில் சந்தேகநபருடன் பல மாணவிகள் நெருக்கமாக எடுத்துகொண்ட புகைபடங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்