ஊக்க மருந்து பயன்படுத்தியதாக ஒப்புக் கொண்ட ககிசோ ரபாடா இடைநீக்கம்

தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளரான ககிசோ ரபாடா பொழுதுபோக்கிற்காக ஊக்க மருந்தினை பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இதற்கமைய கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் ககிசோ ரபாடா குறிப்பிட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் (South African Cricketers’ Association) ஊடாக ரபாடா வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 2 போட்டிகளில் விளையாடியதன் பின்னர், அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்பினார்.
இந்தநிலையில் குறித்த செயலுக்காக ககிசோ ரபாடா மன்னிப்பு கோரியுள்ளதுடன், இனிவரும் காலங்களில் தனது தொழிலுக்கு விசுவாசமாக இருப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பை மிகுந்த மதிப்புடன் கருதுவதாகவும், அர்ப்பணிப்புடன் மீண்டும் கிரிக்கெட்டில் பங்கேற்க எதிர்பார்த்துள்ளதாகவும் ககிசோ ரபாடா குறிப்பிட்டுள்ளார்.