ஜூன் 7 முதல் 13 வரை தேசிய பொசன் வாரமாக பிரகடனம்

பொசன் குழுவால் தீர்மானிக்கப்பட்டபடி, ஜூன் 07 முதல் 13 வரை தேசிய போசன் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பொசன் பௌர்ணமி போயா தினம் ஜூன் 10 ஆம் தேதி வருகிறது.
தேசிய பொசன் வாரத்தின் போது அனுராதபுர புனித நகரத்தை ஒரு காட்சி மைதானமாக மாற்ற வேண்டாம் என்றும், அரஹத் மஹிந்த தேரருக்கு (அனுபுது மிகிந்து மஹாரஹதன் வஹன்சே) மரியாதை செலுத்தும் விதமாக அதைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் அட்டமஸ்தானாதிபதி அதி வணக்கத்திற்குரிய கலாநிதி பல்லேகம ஹேமரத்தன நாயக்க தேரர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
ஜூன் 07 முதல் 13 ஆம் தேதி வரை தேசிய பொசன் வாரத்தில் அனுராதபுரம், தந்திரிமலை மற்றும் மிஹிந்தலை ஆகிய புனித நகரங்களை மையமாகக் கொண்டு பல்வேறு மத நிகழ்ச்சிகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அட்டமஸ்தானாதிபதி தேரர் தெரிவித்தார்.
(Visited 3 times, 3 visits today)