ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் மிக அதிக வெப்பம் – அறிந்திருக்க வேண்டியவை
2023ஆம் ஆண்டு ஜுலை மாதமானது வெப்பநிலையில் மிக அதிக வெப்பநிலை நிலவிய மாதமாக, பதிவாகியுள்ளது.
சிலவேளைகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் மிக அதிக வெப்பமான மாதமாக, பதிவாகக்கூடும் என நாசாவின் காலநிலையியல் நிபுணர் கெவின் ஷ்மித் தெரிவித்துள்ளார்.
தரையிலும் கடலிலும் வெப்பநிலை அதிகரிப்பில் சாதனை படைக்கப்படுவதற்கு மனிதர்களுடன் தொடர்படுத்தப்படுத்தக்கூடிய காலநிலை மாற்றமே இதற்குக் காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த வெப்ப அலைகளுக்கு காலநிலை மாற்றமே காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பருவநிலையில் இயற்கையாகவே மாற்றங்கள் ஏற்படுகின்றன. எனினும் அண்மைக் காலத்தில் பூமியின் வெப்பநிலை முன்னெப்போதுமில்லாத வகையில் வேகமாக உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். பசுமை இல்ல விளைவுடன் இது இணைத்து பார்க்கப்படுகிறது.
காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் உலக நாடுகள் பலவும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. சூழல்பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வுட்டுவதன் முக்கியத்தும் வெகுவாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, காலநிலை மாற்றத்தை தடுப்பதற்குப் பதிலாக அதனை தாமதப்படுத்தல் மாத்திரமே இதுவரை நடந்துள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் சுட்டிக்காட்டியதுடன், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு உலக நாடுகளுக்கு ஆதரவளிப்படும் எனத் தெரிவித்தார்.
உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகம் இலங்கையில் ஸ்தாபிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.