இலங்கை

நீதவான் பதவி விலகல் விவகாரம் – BASL கண்டனம்

நீதித்துறை உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் மற்றும் வன்முறைகள் இடம்பெறுவதை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்(BASL) வன்மையாகக் கண்டித்துள்ளது.

முல்லைத்தீவு நீதவான் டி.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) விடுத்துள்ள அறிக்கையிலே​யே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊடக அறிக்கையை BASL தலைவர் கௌசல்யா நவரத்ன மற்றும் அதன் செயலாளர் இசுரு பாலபடபெந்தி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு நீதவானின் இராஜினாமா இலங்கையில் நீதித்துறை அதிகாரிகளின் பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பக்கூடும் என்று BASL எச்சரிக்கை விடுத்துள்ளது.எனவே, இச்சம்பவம் குறித்து முழுமையான பாரபட்சமற்ற விசாரணையை ஆரம்பிக்குமாறு அரசாங்கத்தை BASL வலியுறுத்துகிறது.

BASL calls on govt. to investigate sudden resignation of Mullaitivu  District Judge

முல்லைத்தீவு நீதவான் டி.சரவணராஜா தனது பதவி விலகல் அச்சுறுத்தல் காரணமாகவே பதவி விலகுவதாகக் கூறி நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளரிடம் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும், நீதித்துறையின் அனைத்து உறுப்பினர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும் உறுதியளித்துள்ளதாக BASL தெரிவித்துள்ளது.

“நீதிபதிகள் பயம் அல்லது மிரட்டல் இல்லாமல் தங்கள் கடமைகளை ஆற்றக்கூடிய சூழலை பராமரிப்பதில் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்று BASL அறிக்கை மேலும் கூறியது.

(Visited 11 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்