வங்கதேசத்தில் அதிகரித்து வரும் தாக்குதல்களுக்கு மத்தியில் பாதுகாப்பு கோரும் பத்திரிகையாளர்கள்
வங்கதேசத்தில்(Bangladesh) உள்ள பத்திரிகையாளர்கள், பதிப்பாசிரியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள், இரண்டு முன்னணி தேசிய நாளிதழ்கள் மீது சமீபத்தில் நடந்த தாக்குதலை தொடர்ந்து, காவல்துறை தங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ்(Muhammad Yunus) தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தால் தெற்காசிய நாட்டில் ஊடகத் துறை திட்டமிட்டு குறிவைக்கப்பட்டு வருவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நாட்டின் முன்னணி ஆங்கில மொழி நாளிதழான டெய்லி ஸ்டார்(Daily Star) மற்றும் தலைநகர் டாக்காவில்(Dhaka) அமைந்துள்ள மிகப்பெரிய வங்காள மொழி செய்தித்தாளான புரோதோம் அலோ(Prothom Alo) மீதான தாக்குதல்களைத் தடுக்க நிர்வாகம் தவறிவிட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.





