செய்தி விளையாட்டு

கடந்த மாதத்திற்கான ICCயின் சிறந்த வீரர் விருதை வென்ற ஜோமல் வாரிக்கன்

ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது ICC சார்பில் வழங்கப்படுகிறது.

இதற்கிடையே, ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான பரிந்துரை செய்யப்பட்ட பட்டியல் வெளியானது.

சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி, வெஸ்ட் இண்டீசின் ஜோமல் வாரிக்கன், பாகிஸ்தானின் நோமன் அலி ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில், ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வெஸ்ட் இண்டீசின் ஜோமல் வாரிக்கன் பெற்றார். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் சுழலில் அசத்திய ஜோமல் வாரிக்கன் 19 விக்கெட் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு இந்தியாவின் கொங்கடி திரிஷா, வெஸ்ட் இண்டீசின் கரிஷ்மா, ஆஸ்திரேலியாவின் பெத் மூனே ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர்.

இதேபோல் ஜனவரி மாதத்திற்கான ICC சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலியாவின் பெத் மூனி பெற்றார்.

(Visited 29 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி