ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ, இளைய மகனுக்கு மறியல்!
முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் அவரது இளைய மகன் ஆகியோர் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட இருவரும், வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சதொசவுக்குரிய லொறியொன்றை முறைகேடாக பயன்படுத்தி அரசாங்கத்துக்கு நிதி இழப்பை ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அத்துடன், இவ்விவகாரம் தொடர்பில் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் மூத்த மகன் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





