ICC தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்த ஜோ ரூட்

இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பான இந்த போட்டியில் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து, இந்தியா முதல் இன்னிங்சில் 387 ரன்கள் சேர்த்தன. 2ஆவது இன்னிங்சில் இங்கிலாந்து 192 ரன்கள் அடித்தது.
193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 170 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
இந்த போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட் முதல் இன்னிங்சில் சதம் விளாசினார். 2ஆவது இன்னிங்சில் 40 ரன்கள் சேர்த்தார்.
இதன்மூலம் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
கேன் வில்லியம்சன் 2ஆவது இடத்திலும், ஹாரி ப்ரூக் 3ஆவது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், சுப்மன் கில் ஆகியோர் முறையே 5, 8 மற்றும் 9ஆவது இடத்தை பிடித்துள்ளனர்.